பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்! – மாணிக்கவாசகர்
பன்னருஞ்சிறப்பிற்குப் பொன்னடி பணிக
அறமுதல் அரியெனும் அவனே பரனே
அணுவினுள் அவனே செகமுணர் பரனே
மனனே கரிசொல வருபுயல் பரனே
அமுதரு ளினனே யவனே பரனே
நிலனே வானே நிறைமுதல் பரனே
வலனே தரிதிகி ரியனே பரனே
இன்னணம் அமைதரல் இறையரங் கேசனைப்
பொன்னடி பணிபவர் புகுபதி
பன்னருஞ் சிறப்பில் பரந்தா மமதே
பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்
நிலம், நீர், நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன்
புலன்ஆய மைந்தனோடு என்னவகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகுஏழ் என திசைபத்து என தான் ஒருவனுமே
பல ஆகி நின்றவர் தோள் நோக்கம் ஆடாமோ
– மாணிக்கவாசகர்: திருவாசகம்: திருத்தோள் நோக்கம்
Comments
Post a Comment