வித்தகர் விக்கிரமனை வணங்கிடுவோம்! – தமிழ்த்தேனீ
வித்தகர் விக்கிரமனை வணங்கிடுவோம்! – தமிழ்த்தேனீ
தமிழேஅடித்தளமாய் எழுத்தேவேள்வியாய்,
அமுதசுரபியாய், கலைமகளாய்,
தான் வணங்கத் தமிழ்த்தாயே மகிழும் வண்ணம்
தன் எண்ணம் திண்ணமாய்க் கருத்தில் கொண்டே
எண்பதிலும் எழுதுகிறார் இளமையாய்க்
கலைகள் கொண்டு ஏணியாய்த் தானிருந்து
எழுத்தாளர் பலர் தமையே ஏற்றிவிட்டார்
எழுத்தால் வாழுகின்ற எண்ணற்ற
நலிந்தோர்க்கு இப்போதும் உதவுகின்றார்
எட்டாத புகழில்லை, விருதுமில்லை
என்றாலும் அயராத ஆர்வமென்னும்
நெய் ஊற்றி எழுத்தென்னும் விளக்கேற்றி
மகிழ்கின்றார் எண்ணுகின்ற அற்புதங்கள்
கைவசமாய்த் தான் கொண்டு கையெழுத்தாய்
வடிக்கின்ற வித்தகராம் திருவிக்ரமன்
இயலிசை நாடகமாம் முத்தமிழும் கலந்தே
வாழும் வித்தகராம் திரிவிக்ரமன் வேம்பு
என்னும் தளிராய்ப் பெயர் கொண்டு
விக்ரமன் என்னும் விருட்சமாய் வளர்ந்து
நிற்கும் இலக்கியப்பீடம், இமையமாய்
உயர்ந்திருந்தும் இணக்கமாய்ப் பேசுகின்றார்
இனிதே பழகுகின்றார் இலக்கியப்பீடமதை
தளராமல் இயக்குகிறார் தானென்ற
கருவமின்றி தன்னுணர்வோடு இயங்குகிறார்
தாரணியில் எழுத்தன்றி ஏதுமில்லை என்று
இனிமையாய்ச் சிரிக்கின்றார் கணிணியுகம் தான்
ஆனாலும் கையெழுத்தே மூலமென்றார்
கையெழுத்தில்லாமல் கணிணிக்கு ஏது
பயன் என்றே கருத்துள்ள சிரிப்புடனே
வினவுகிறார். உண்மைதானே,படைப்போர்
பலர் இருக்க, படிப்பதற்கு யார் உண்டு
என்கின்ற என் வினாவுக்கு விடையாய்
பாங்குடனே பதில் பகர்ந்தார் வாசகர்கள்
முன்னிலும் அதிகம் இப்போதென்று புள்ளிக்
கணக்குகளை அள்ளி வீசுகின்றார் அதிகம்தான்
வாசகர்கள் தற்போதும் என்றே உரைத்து
நயமாய்ச் சிரிக்கின்றார், நல்லதொரு வித்தகர்
நலம் பல செய்தவர் எழுத்துலக வளர்ச்சிக்கே,
மூத்ததொரு ஒப்பிலா எழுத்துச் சித்தரை, தமிழ்ப்
பித்தரை இத்தரை இருக்கும் வரை, இவர் புகழும்
இருக்கவேண்டித் தமிழ்மரபுகாக்கஎண்ணி எதிர்காலத்
தலைமுறையும் மறக்கவொண்ணா வகை செய்ய
விரல் நுனி உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சி எண்ணி
மின்பதிப்பும் செய்துவிட பேட்டியொன்றே எடுத்தேன்
இத்தகைய பெரியோரின் தாள் பணிந்தே நாமும்
வணங்கிடுவோம் தமிழின் பெருமை காக்க
அமுதசுரபியாய், கலைமகளாய்,
தான் வணங்கத் தமிழ்த்தாயே மகிழும் வண்ணம்
தன் எண்ணம் திண்ணமாய்க் கருத்தில் கொண்டே
எண்பதிலும் எழுதுகிறார் இளமையாய்க்
கலைகள் கொண்டு ஏணியாய்த் தானிருந்து
எழுத்தாளர் பலர் தமையே ஏற்றிவிட்டார்
எழுத்தால் வாழுகின்ற எண்ணற்ற
நலிந்தோர்க்கு இப்போதும் உதவுகின்றார்
எட்டாத புகழில்லை, விருதுமில்லை
என்றாலும் அயராத ஆர்வமென்னும்
நெய் ஊற்றி எழுத்தென்னும் விளக்கேற்றி
மகிழ்கின்றார் எண்ணுகின்ற அற்புதங்கள்
கைவசமாய்த் தான் கொண்டு கையெழுத்தாய்
வடிக்கின்ற வித்தகராம் திருவிக்ரமன்
இயலிசை நாடகமாம் முத்தமிழும் கலந்தே
வாழும் வித்தகராம் திரிவிக்ரமன் வேம்பு
என்னும் தளிராய்ப் பெயர் கொண்டு
விக்ரமன் என்னும் விருட்சமாய் வளர்ந்து
நிற்கும் இலக்கியப்பீடம், இமையமாய்
உயர்ந்திருந்தும் இணக்கமாய்ப் பேசுகின்றார்
இனிதே பழகுகின்றார் இலக்கியப்பீடமதை
தளராமல் இயக்குகிறார் தானென்ற
கருவமின்றி தன்னுணர்வோடு இயங்குகிறார்
தாரணியில் எழுத்தன்றி ஏதுமில்லை என்று
இனிமையாய்ச் சிரிக்கின்றார் கணிணியுகம் தான்
ஆனாலும் கையெழுத்தே மூலமென்றார்
கையெழுத்தில்லாமல் கணிணிக்கு ஏது
பயன் என்றே கருத்துள்ள சிரிப்புடனே
வினவுகிறார். உண்மைதானே,படைப்போர்
பலர் இருக்க, படிப்பதற்கு யார் உண்டு
என்கின்ற என் வினாவுக்கு விடையாய்
பாங்குடனே பதில் பகர்ந்தார் வாசகர்கள்
முன்னிலும் அதிகம் இப்போதென்று புள்ளிக்
கணக்குகளை அள்ளி வீசுகின்றார் அதிகம்தான்
வாசகர்கள் தற்போதும் என்றே உரைத்து
நயமாய்ச் சிரிக்கின்றார், நல்லதொரு வித்தகர்
நலம் பல செய்தவர் எழுத்துலக வளர்ச்சிக்கே,
மூத்ததொரு ஒப்பிலா எழுத்துச் சித்தரை, தமிழ்ப்
பித்தரை இத்தரை இருக்கும் வரை, இவர் புகழும்
இருக்கவேண்டித் தமிழ்மரபுகாக்கஎண்ணி எதிர்காலத்
தலைமுறையும் மறக்கவொண்ணா வகை செய்ய
விரல் நுனி உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சி எண்ணி
மின்பதிப்பும் செய்துவிட பேட்டியொன்றே எடுத்தேன்
இத்தகைய பெரியோரின் தாள் பணிந்தே நாமும்
வணங்கிடுவோம் தமிழின் பெருமை காக்க
– தமிழ்த்தேனீ
[மறைந்த விக்கிரமன் இருந்தபொழுது
பேட்டிஎடுத்து அவரிடமே
எழுதிக்கொடுத்த கவிதை]
Comments
Post a Comment