வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்
வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்
தாந்தித்திமி தந்தக்கோனாரே
தீந்திமித்திமி திந்தக்கோனாரே
ஆனந்தக்கோனாரேஅருள்
ஆனந்தக்கோனாரே
ஆயிரத்தெட்டு அண்டமுங்கண்டேன்
அந்தவட்டத்துள்ளே நின்றதுங்கண்டேன்
மாயிருஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்தமனத்துறுஞ் சந்தேகந்தீர்த்தேன். (தாந்)
பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்குவருத்துதானே
மெய்யென்று சொன்னாக்கால் அகப்பேய் வீடுபெறலாமே.
வேதமோதாதே அகப்பேய் மெய்கண்டோ மென்னாதே
பாதநம்பாதே அகப்பேய் பாவித்துப் பாராதே.”
– அகப்பேய்ச் சித்தர்
வாழ உதவும் விளக்கம்
ReplyDelete