தலைப்பு-அல்லல் அறுப்பானை வாழ்த்துக : thalaippu_allalaruppaanaivaazhthuga

அல்லல் அறுப்பானை வாழ்த்துக!

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறர் உருவம் யான்எனதென் உரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே!
 – மாணிக்கவாசகர்