Skip to main content

தமிழ்வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்! – வாணிதாசன்

தமிழ்வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்! – வாணிதாசன்

தலைப்பு-தமிழ்வெற்றிமுரசு-வாணிதாசன் : thalaippu_thamizhvetrimurasu_vanidasan

செய்யும் விளைந்தது;
தையும் பிறந்தது;
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! – புதுச்
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!
பொய்கை புதர்ச்செடி
பூக்கள் நிறைந்தன;
பொன்னொளி எங்கணுங் கண்டோம்! – புதுப்
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!
மாவும் சுளைப்பலா
வாழையும்   செந்நெலும்
வந்து குவிந்தன வீட்டில்! – தை
வந்தது வந்தது நாட்டில்!
கூவும் குயிலினம்
கூவாக் குயிலினம்
தாவிப் பறந்தது மேல்வான்! – ஒளி
தாவிப் பறந்தது கீழ்வான்!
சிட்டுச் சிறுவரின்
செங்கைக் கரும்புகள்
தொட்டுப் பிசைந்தன பொங்கல்! – அதை
இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!
வெட்ட வெளியெலாம்
மெல்லியர் பண்ணிசை
மேவும்; சிலம்பொலி கேட்கும்! – தமிழ்
வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்!

– வாணிதாசன்



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்