Skip to main content

தொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று – சான்றோர் மெய்ம்மறை

தலைப்பு-சல்லிக்கட்டு,இலக்கியச்சான்று :thalaippu_sallikkattu_ilakkiyachaandru_meymmarai


தொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று 


முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி
நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத்
துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும்
முறையுளிப் பரா அய்ப்
பாய்ந்தனர் தொழூஉ
(முல்லைக்கலி 101:10-14)
இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும்
மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப்
பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ
விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து
உறழ் அணிமணி நிலத்துப் பிறழப்
பயில் இதழ் மலர் உண்கண் மாதர்
மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாதுஎரு மன்றத்து அயர்வர்
தழூஉ
(முல்லைக்கலி 103: 56, 62)
பொருள்:-
  ஆற்று நீர்த்துறை, பெரிய ஆலமரம், பழமையான மரங்கள் உள்ள இடங்களைத் தேர்வு செய்து தொழு கூட்டப்பட்டது. புலிகளின் கூட்டமும் யானைகளின் கூட்டமும் மோதிக் கொள்வது போல வீரர்களும் ஏறுகளோடு மோதினர். ஏறுகளின் கழுத்துமணி அவிழ்க்கப்பட்டபோது மகளிர் மகிழ்ந்தனர். தாது எருமன்றம் என்பது பெண்கள் குரவையாடும் இடம்.
அறிக:
  ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாகப் பழந்தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள். படிக்க படிக்க தமிழ் நமக்கு வயப்படும். சங்க இலக்கியங்களின் உன்னதம் இதுவரை எவரும் வெளிக்கொணரவில்லை. தமிழர்களே சங்க இலக்கியங்களைப் படியுங்கள்.



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்