யாவும் நீ! – தாயுமானவர்
யாவும் நீ!
கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்
கோவே மன்றில் கூத்தாடற்
கெழுந்த சுடரே இமையவரை
என்தாய் கண்ணுக் கினியானே
தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ;
துணைநீ; தந்தை தாயும்நீ;
அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ;
ஆவி, யாக்கை நீதானே !

Comments
Post a Comment