எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி)
attai_ezhilarasi

 14
அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு,
                “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை
யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் ,
அறங்கூ றவையம் அடைந்து விரைவில்
  1. நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ”
எனலும் இருவரும் மின்னெனச் சென்று
அவைய வாயிலை அடைய ஆங்குள
காவலன் இவர்களைக் காணப் பெற்றதும்
கையூட் டின்றி உள்விடா னாயினும்
  1. வழிவிட் டவரை விழைவுடன் பணிய
துலைநா வன்ன சமனிலைக் குரிய
இறைவனை யணுகலும், எழுந்து நின்று
இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்
அரசியும் தோழியும் அனைத்தும் கூறி
  1. குருதித் துணியும் கொடுத்து, அமையவும் 12
சுற்றிநின்ற சேவகர் நோக்கி
“விரைவிற் சென்று விளம்பிய இடத்தில்
காணும் தோற்றம் கணித்து வருக”
என்றலும் சேவகர் நன்றெனக் கூறிப்
  1. பிணத்தைக் கண்ட பெருங்கழு கினம்போல்
உயர்பொருள் கிட்டும் உள்ளக் களிப்புடன்
குறித்த இடத்தைக் கோணா தடைந்து
குறிப்பன குறித்துக் கொள்வன கொண்டு
அறவனை யணுகலும் அவர்தம் வாயால்
என்றலும் சேவகர் நன்றெனக் கூறி
  1. ஆங்கொரு மூலை அறைக்குச் செல்லப்
பணித்தபின் பாங்கர் சூழ்ந்துள சேவக
நண்பரை நோக்கி “நல்லாள் துணைவர்
பணச்செருக் கால்நமைப் பணியச் செய்தனர்
திரட்டினர் செல்வம் மருட்டினர் நம்மை
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்