Skip to main content

நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ


தலைப்பு-தமிழ்ப்பற்றோடு  பொங்கல் : thalaippu_pongalittuvaazhiyave_ponnavaikko


பூத்தது புத்தாண்டு
பொங்கல் திருநாளில்
போயிற்று ஓராண்டு
பொன்னான வாழ்நாளில்
சென்ற ஓராண்டில்
செய்தோமா நற்பணிகள்
என்றே சிந்திப்போம்
ஏற்போம் தவறுகளை
இன்றிந்த புத்தாண்டில்
ஏற்றமுடன் நற்பணிகள்
சாதிக்கச் சிந்திப்போம்
சாதனைகள் செய்திடுவோம்
பொங்கல் திருநாளில்
அகமெனும் பானையில்
அன்பெனும் நீரூற்றி
அறிவெனும் அரிசியிட்டு
பாசமெனும் பாலூற்றி
நேசக் கரங்களினால்
நேர்மை நெருப்பேற்றி
தீந்தமிழ்த் தேனூற்றி
தித்திக்கும் பொங்கலிட்டு
ஒற்றுமை உணர்வுபொங்க
உற்ற உறவினராய்
நற்றமிழ்ப் பற்றோடு
பொங்கலோ பொங்கலென
பொங்கலிட்டு வாழியவே!
 முனைவர் மு.பொன்னவைக்கோ


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்