Posts

Showing posts from January, 2016

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்

Image
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      24 சனவரி 2016       கருத்திற்காக.. (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி) துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும் தாழ்ந்தோர் துயரைப் போக்கு முணர்வும் புத்துயி ரளிக்க அமைவுடை வாணாள் அன்புடன் கழிக்க ஆவன கருதி அன்றே விரைந்து காணார் கேளார் கால்முடப் பட்டோர் பிணிநடுக் குற்றோர் புகலிடம் அற்றோர் ஆடை யின்றி வாடையின் மெலிந்தோர் உண்டி யின்றி ஒட்டிய வயிற்றினர் குடிசை யின்றிக் குரங்கென வதிவோர் வேலை யற்ற...

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

Image
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      17 சனவரி 2016       கருத்திற்காக.. (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து                 கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங் கவிழ்த்து நிதியறை சென்றுநேர்ந்தவை பெற்றனர் பின்னர் அவர்கள் பேணிய பொருளில் அவர்கட் குரியதை இவர்கள் அளித்து “முடியாத் துயரால் மூவரும் மாய்ந்தோம்” என்றபொய் நறுக்கும் இயல்புடன் பெற்று, வணிகர் மூவரும் மாற்றுருவுடனே, ...

ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

Image
ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன் இலக்குவனார் திருவள்ளுவன்      24 சனவரி 2016       கருத்திற்காக.. என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப் பொம்மன் கருவுற்ற நாடு! பாரினில் தொன்மை வாய்ந்ததிந் நாடு! பலபல துறையில் சிறந்ததிந் நாடு! ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! ஆடலும் பாடலும் வளர்த்ததிந் நாடு! சீரிய பண்பு நிறைந்ததிந் நாடு! செந்தமிழ் மொழிவளன் செறிந்ததிந் நாடு! ஓரடி வெம்பட உயிர்விட்ட நாடு! ஒடுங்கியே பூனைபோல் இருப்பது கேடு! ...