சுந்தரச் சிலேடைகள் 5 : கோயில்மாடும் இளைஞனும்
அகரமுதல 179, பங்குனி 13 , 2048 / மார்ச்சு 26, 2017
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 5
ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம்,தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும்
சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும்
விண்ணேர் இளைஞனும் ஒன்று.
பொருள்
கோயில்மாடு & இளைஞன்.
1) ஊர்சுற்றித் திரியும்.
2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும்.
3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும்
4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும்.
5) வெற்றி பெறும்வரையில் போராடும்
எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்
Comments
Post a Comment