குதூகலித்தே ஆடுவாய் ! – கே. கமலசரசுவதி
குதூகலித்தே ஆடுவாய் !
குதித்தாடிக் குதித்தாடிக்,குதூகலித்தே ஆடுவாய் !
குமிழ்ச் சிரிப்புக் காட்டியே,
குறுநகையும் புரிவாய் !
குதித்தாடும் காலமிது,
குறை எதுவும் வைக்காதே !
சிறை பூட்டும் காலமதில்,
கால் விலங்கும் பூட்டிடுவார்.
எதற்கென்றும் அஞ்சாதே !
எவரிடமும் கெஞ்சாதே !
குமிழ்ச் சிரிப்பை சதங்கையாக்கி,
குதூகலமாய் நடனமிடு !
– கே. கமலசரசுவதி
Comments
Post a Comment