தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்
தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்
தான்வாழத் தமிழ்கற்றுக்
கொண்ட கேடன்
தமிழ்வளர்ச்சிக் கிடையூறு
செய்கின் றானால்
வான்மீதும் தமிழுணர
வேண்டு மானால்
வண்மொழியைக் கற்கவரும்
யாவ ரையும்
“நான்வாழ வகைசெய்யும்
நற்றா யேநின்
நலத்திற்கோர் இடையூறு
வருங்கா லத்தில்
நான்மாள நேர்ந்தாலும்
அஞ்சா துன்றன்
நலங்காப்பேன்” என உறுதி
பகரச் செய்வீர்
-பாவலர் நாரா. நாச்சியப்பன்
Comments
Post a Comment