Skip to main content

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்




தாத்தாசந்தர் சுப்பிரமணியன்


தாத்தா எங்கோ நடக்கும் போதும்
சத்தம் கேட்கிறது!
‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத்
தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை
பக்கம் கேட்கிறது!
எனக்குப் பக்கம் கேட்கிறது!

சட்டைப் பையில் ‘சாக்லெட்டு எடுத்துத்
தாத்தா தந்திடுவார்!
எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான்
சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம்
தாத்தா வந்திடுவார்!
என்முன் தாத்தா வந்திடுவார்!

வீட்டில் இருக்கும் வேளை கணக்கில்
விளக்கங்கள் சொல்வார்!
வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என்
வெள்ளைத் தாளில் வண்ணம் தீட்டி
வேடிக்கை செய்வார்!
நன்றாய் வேடிக்கை செய்வார்!

சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள்:  பக்கம் 30

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்