சுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சுந்தரச் சிலேடைகள்
இதயமும் கடிகாரமும்
துடித்திடும், உள்ளிருக்கும், தூங்காமல் ஓடும்,வடிக்க அழகூட்டும், வாழ்வில்-படியாத
மாந்தருக்கும் பாங்காகும் மாகடி காரமும் ,
சாந்த இதயமும் சான்று.
பொருள்:
இதயம்
1)இதயம் துடிக்கும்
2) உயிர்களின் உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக அமைந்திருக்கும்.
3) நாம் தூங்கினாலும் அதுதூங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும்.
4) வரைந்து பார்த்தால் அழகாக இருக்கும்.
5) படித்தவர், படியாதவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் அமைந்திருக்கும்.
கடிகாரம்
1) துடிக்கும்
2) கண்ணாடிக்குள் இருக்கும்.
3) தூங்காமல் ஓடும்
4) வரைந்து பார்க்க அழகூட்டும்.
5) படித்தவர் வீடு , படியாதோர் வீடு என்ற கணக்கின்றி அனைவரது வீட்டிலும் இருக்கும்.
Comments
Post a Comment