தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார் -கெர்சோம் செல்லையா.
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார்!
எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல்,
எவ்வளவென்று மலைக்கின்றார்.
இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி,
எளியரும் பண்பைக் கலைக்கின்றார்.
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி,
தரணியைச் சீர் குலைக்கின்றார்.
அப்படிப்பட்டோர் கையினில் மீள,
அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!
- கெர்சோம் செல்லையா
Comments
Post a Comment