Skip to main content

சுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்




சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 4

கோழியும் குழந்தையும்

உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத்
தெருவோடிக் கூவிநிற்கும்  தேவைக்(கு)-இருளில்
இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும்
விரைகுழவி கோழியு  மொன்று .
பொருள்-கோழி, குழந்தை
கோழிபோலவே குழந்தையும்
மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும்.
தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும்
உணவு  உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும்.
இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.

கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி
கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்