தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி


தமிழணங்கே ! காணலுறும் தேவதைநீ  கண்ணே பெண்ணே
கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே!
பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய்
பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய்
பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும்
புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும்
காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன்
கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் !

கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி
தமிழாசிரியர்,
நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி,
திருப்பூர்