தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்
தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே!
– தேவநேயப் பாவாணர்
[‘மருவே செறித்த’ என்ற திருப்புகழ் மெட்டு
தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற
வண்ணம்]
தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது
தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக
முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி
முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே
கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன் மகவோரே
கவலா திருந்து வௌமீ தெறிந்து கறையா னருந்த விடலானார்
பனிலாரி வந்து பலகா லெழுந்து பலவா யிருந்த நினவாய
கலைவாரி யிந்த நிலையாக விண்டு முலவா திருந்த கனியாளே!
-ஞா.தேவநேயப் பாவாணர்:
செந்தமிழ்க் காஞ்சி: பக்கம் 07
Comments
Post a Comment