(திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல் : தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
 1. காமத்துப் பால்
14. களவு இயல்
 1. அலர் அறிவுறுத்தல்   
   தலைமக்களின் காதலை, ஊரார்அறிந்து பலவாறு பழிதூற்றல்
(01-05 தலைவன் சொல்லியவை)
 1. அலர்எழ, ஆர்உயிர் நிற்கும், அதனைப்
      பலர்அறியார் பாக்கியத் தால்.
       “பழிச்சொல்லால், உயிரும் நிற்கிறது;
இதனை, ஊரார் அறியார்”.

 1. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா(து),
      அலர்எமக்(கு) ஈந்த(து)இவ் ஊர்.
“குவளைமலர்க் கண்ணாள் அருமை
அறியாது, பழிதூற்றுவார் ஊரார்”.

 1. உறாஅதோ ஊர்அறிந்த கெளவை? அதனைப்
      பெறாஅது, பெற்(று)அன்ன நீர்த்து.
“ஊர்ப்பழி உண்மை ஆகாதோ?
காதலைப் பெற்றால்போல் மகிழ்வேன்”.

 1. கவ்வையால், கவ்விது காமம்; அதுஇன்றேல்,
      தவ்என்னும் தன்மை இழந்து,
“பழியால், காதல் வளர்கிறது;
இல்லைஎனின், இயல்பை இழக்கும்”.

 1. களித்தொறும் கள்உண்டல் வேட்(டு)அற்(று)ஆல், காமம்,
      வெளிப்படும் தோறும் இனிது.
போதை ஏறஏறக் கள்ஆசை;
தெரியத்தெரியக் காதல் இனிது.

       (06-10 தலைவி சொல்லியவை)

 1. கண்டது மன்னும், ஒருநாள்; அலர்மன்னும்,
      திங்களைப் பாம்புகொண்(டு) அற்று.
அவரைப் பார்த்தது, ஒருநாள்தான்;
பழிச்சொல் கிரகணம்போல் ஊர்எல்லாம்.

 1. ஊரவர் கெளவை எருஆக, அன்னைசொல்
      நீர்ஆக, நீளும்இந் நோய்.
ஊர்ப்பழி உரம்ஆகத், தாய்சொல்
நீர்ஆகக், காதல்பயிர் வளரும்.

 1. “நெய்யால் எரிநுதுப்பேம்” என்(று)அற்(று)ஆல், “கெளவையால்
      காமம் நுதிப்பேம்” எனல்.
“நெய்யால் நெருப்பும், ஊர்ப்பழியால்
காதலும் என்றுமே அழிந்துவிடா”.

 1. அலர்நாண ஒல்வதோ? “அஞ்சல்ஓம்(பு)” என்றார்,
      பலர்நாண நீத்தக் கடை.
“அஞ்சாது இரு”எனப் பிரிந்தார்;
ஊர்ப்பழிக்கு நானா அஞ்சுவேன்?

 1. தாம்வேண்டின், நல்குவர் காதலர்; யாம்வேண்டும்
      கெளவை, எடுக்கும்இவ் ஊர்.
“விருப்பப்படிப் பழிச்சொல் ஊரில்;
விருப்பப்படிக் காதலர் தருவார்”.

பேரா.வெ.அரங்கராசன்