மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! – தாமோதரன் கபாலி
மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்!
உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யல்ல!உடமைகளும் உரிமைகளும் இழக்க வல்ல!
உண்மைகளும் உணர்வுகளும் சாக வல்ல!
உள்ளொளியும் உயிரினையும் போக்க வல்ல!
பண்ணிசையும் பாத்தமிழாய் வாழ வேண்டும்!
பரிவோடும் பண்போடும் நோக்க வேண்டும்!
மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்!
மாசற்ற வாழ்வினையே போற்ற வேண்டும்!
– தாமோதரன் கபாலி
Comments
Post a Comment