திருக்குறள் அறுசொல் உரை

03. காமத்துப் பால்

14. களவு இயல்

112.நலம் புனைந்து உரைத்தல்

  தலைவியின் நலம்மிகு அழகைத்,
 தலைவன்  மகிழ்ந்து பாராட்டியது.
        (01-10 தலைவன் சொல்லியவை)
  1. “நல்நீரை வாழி, அனிச்சமே! நின்னினும்,
      மெல்நீரள் யாம்வீழ் பவள்”.
  “மெல்லிய அனிச்சப்பூவே! என்னவள்
         மெல்லியவள், உன்னைக் காட்டிலும்”.
  1. மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண்,
      பலர்காணும் பூஒக்கும் என்று.
      “மனமே! இவள்கண், பலர்காணும்
        குவளைப் பூப்போல்என, மயங்காதே”.
  1. முறிமேனி, முத்தம், முறுவல், வெறிநாற்றம்,
      வேல்உண்கண், வேய்த்தோள், அவட்கு.
   “தளிர்உடல், முத்துப்பல், மலர்மணம்,
        மூங்கில்தோள், வேல்கண், அவளுக்கு”.
 1114. காணின், குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்,
     “மாண்இழை கண்ஒவ்வேம்” என்று.
      “இவளின் கண்ணைக் காணின்,
         ‘ஒப்பாகேன்’ எனக், குவளை தலைகவிழும்”.
  1. அனிச்சப்பூக் கால்களையாள், பெய்தாள்; நுசுப்பிற்கு,
      நல்ல படாஅ பறை.
“அனிச்சப்பூவைக் காம்போடு சூடின்,
        இவள்இடை தாங்காது; ஒடியும்”.
  1. மதியும், மடந்தை முகனும் அறியா,
      பதியில் கலங்கிய மீன்.
      முழுமதியா? முகமா? என்று
        அறியாது, விண்மீன்கள் குழம்பும்.
  1. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல,
      மறுஉண்டோ மாதர் முகத்து?
குறைந்து நிறையும் நிலாக்கறை,
        தலைவியின் முகத்தில் உண்டோ?
  1. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,
      காதலை வாழி, மதி!
என்காதலியின் முகம்போல் ஒளிர்ந்தால்,
         நிலவே! நீயும் என்காதலி.
  1. மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி ஆயின்,
      பலர்காணத் தோன்றல், மதி!
குவளைக்கண் காதலியின் முகம்ஒத்தால்,
        மட்டுமே, நிலவே! தோன்று.
  1. அனிச்சமும், அன்னத்தின் தூவியும், மாதர்
      அடிக்கு நெருஞ்சிப் பழம்.
அன்னப் பறவையின் மெல்இறகும்,
        என்னவள் அடிக்கு, நெருஞ்சிமுள்.
பேரா.வெ.அரங்கராசன்