புகை இல்லாத புகைவண்டி – சின்னா சர்புதீன்
புகை இல்லாத புகைவண்டி
ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ
ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ
இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து
எதிர்த்திசையை நோக்கியே
விரைந்துசெல்லும் வண்டியைப்பார்
வீறுகொண்டு பறக்குதே
நீண்டுநெடுங் தூரம்ஓடி
நிற்குமிடம் தன்னிலே
மீண்டும்மக்கள் தம்மைஏற்றி
மிகவிரைவாய்ச் செல்லுமே
புகையிரதம் எனஇதற்குப்
பெயரிட்டார்கள் முன்னராம்
புகைவராத இன்றும் அது
புகையிரதம் தானடா
ஆடுமாடு மனிதர் பொருள்
அத்தனையும் சுமக்குமாம்
வீடுபோன்ற அறைகள்பல
வரிசையாக இருக்குமாம்
காடுமேடு வயல்நிலங்கள்
கடல்கடந்தும் போகுமாம்
நாடிரண்டை மூன்றைத்தொடுத்து
நீண்டபயணம் செல்லுமாம் !
( இலங்கை சின்னா சர்புதீன் எழுதிய ‘எங்கள் உலகம்’ – சிறுவர் பாடல்கள் எனும் நூலிலிருந்து )
– முதுவை இதாயத்து
Comments
Post a Comment