திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 025. அருள் உடைமை
01. அறத்துப் பால்
03. துறவற இயல்
அதிகாரம் 025. அருள் உடைமை
தொடர்பே இல்லா உயிர்களிடத்தும்,
தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு.
- அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்,
அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்;
பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு.
- நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான்
எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும்
அருளை, நல்வழியில் ஆளுக..
- அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த
இருள்நிறை துயர்உலகம் புகுதல்,
அருள்நிறை நெஞ்சர்க்கு இல்லை.
- மன்உயிர் ஓம்பி, அருள்ஆள்வாற்(கு) இல்என்ப,
உயிர்களைப் பாதுகாத்[து] அருள்செய்வார்
உயிர்பற்றி எப்பொழுதும் அஞ்சார்.
- அல்லல், அருள்ஆள்வார்க்(கு) இல்லை; வளிவழங்கும்
அருளாளர்க்குத் துன்பமே இல்லை;
அதற்[கு]இவ் உலகமே சான்று.
- பொருள்நீங்கிப், பொச்சாந்தார் என்ப, அருள்நீங்கி,
அருள்விலக்கித் தீயவை செய்வார்,
அருள்பொருள் மறந்தார் ஆவார்.
- அருள்இல்லார்க்(கு), அவ்உலகம் இல்லை; பொருள்இல்லார்க்(கு),
விண்உல[கு] அருள்இல்லார்க்[கு] இல்லை;
மண்உலகு பொருள்இல்லார்க்[கு] இல்லை.
- பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார்
பொருள்இழந்தார், மீண்டும் பெறுவார்;
அருள்இழந்தார் மீண்டும் பெறார்.
- தெருளாதான் மெய்ப்பொருள் கண்(டு)அற்(று)ஆல், தேரின்,
தெளி[வு]இல்லான், உண்மைப் பொருளைக்
காணல்போல் அருள்இல்லான் செய்அறம்.
- வலியார்முன் தன்னை நினைக்க, தான்தன்னின்,
மெலியார்முன் நிற்கும் பொழுது,
வலியார்முன் நிற்பதுபோல் நினைக்க.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 026. புலால் மறுத்தல்)
Comments
Post a Comment