திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்
01.அறத்துப் பால்
03.துறவற இயல்
அதிகாரம் 028. கூடா ஒழுக்கம்
அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத
ஒழுக்கக் கேட்டோடு கூடாமை.
- வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள்
வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு,
மெய்வாய்கண் மூக்குசெவி நகும்.
- வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம்,
மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக்
கோலத்தால் என்ன பயன்?
- வலியில் நிலைமையான் வல்உருவம், பெற்றம்
பொய்வேட ஒழுக்கத்தார், புலித்தோல்
போர்த்திப் புல்மேயும் பசுபோல்வார்.
- தவம்மறைந்(து), அல்லவை செய்தல், வேட்டுவன்
தவவேடத்தார் தீச்செயல், வேடன்
புதர்மறைந்து, பறவை பிடித்தல்போல்.
- ”பற்(று)அற்றேம்” படிற்(று)ஒழுக்கம், எற்(று)எற்(று)என்(று),
”பற்றுஇல்லை” என்பார்தம் பொய்நடத்தை,
என்றுஎன்றும் துன்பங்களையே தரும்.
- நெஞ்சில் துறவார்; துறந்தார்போல், வஞ்சித்து
மனத்துள் பற்[று]இலார் பற்[று]உளார்
போலவே நடிப்பார், கொடியார்.
- புறம்,குன்றி கண்(டு)அனையர் ஏனும், அகம்,குன்றி
குன்றிமணிபோல், காவிக்கோலம்; மனத்துள்,
அதனது மூக்குப்போல் கரிக்கோலம்.
- மனத்தது மா(சு)ஆக, மாண்டார்நீர் ஆடி,
மனத்துள் அழுக்கராய், வெளியில்,
பொய்ஒழுக்கராய் ஏய்ப்போர் பற்பலர்.
- கணைகொடி(து); யாழ்கோடு செவ்வி(து);ஆங்(கு) அன்ன,
அம்புநேர்பு; யாழ்வளைவு; அதன்அதன்
செயற்பாட்டுத் தன்மையால் மதிப்பிடு.
- மழித்தலும், நீட்டலும், வேண்டா, உலகம்
உயர்ந்தார் பழித்தவற்றை ஒழிக்க;
மொட்டையும் சடையும் அதன்பின்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 029. கள்ளாமை)
Comments
Post a Comment