Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 015. பிறன் இல் விழையாமை

arangarasan_thirukkural_arusolurai_attai
01.அறத்துப் பால்                
02.இல்லற இயல்              
அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை

  மற்றவன் மனைவியை, மனத்தால்கூட,
 முற்றும் விரும்பாத ஆளுமை.

  1. பிறன்பொருள்ஆள் பெட்(டு)ஒழுகும் பேதைமை, ஞாலத்(து),
     அறம்பொருள் கண்டார்கண் இல்.

     பிறனது மனைவியை விரும்பும்
       அறியாமை, அறத்தாரிடம் இல்லை.

  1. அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
   நின்றாரின் பேதையார் இல்.

       பிறனது இல்லாளை விரும்புவோன்,
       அறத்தை மறந்த அறிவிலாதோன்

  1. விளிந்தாரின், வே(று)அல்லர் மன்ற, தெளிந்தார்,இல்
   தீமை புரிந்(து)ஒழுகு வார்.

       பேரறிவுத் தெளிவரும், பிறன்இல்லில்
       தீமை செய்தால், செத்தவர்தான்.

  1. எனைத்துணையர் ஆயினும், என்ஆம்….? தினைத்துணையும்
   தேரான், பிறன்இல் புகல்.

       எத்துணை மேலோர் ஆயினும்,
       பிறன்வீடு புகுவோர், கீழோரே.

  1. “எளி(து)”என, இல்இறப்பான் எய்தும்,எஞ் ஞான்றும்
   விளியாது நிற்கும் பழி.

       மனைவியிடம் எல்லை கடந்து
       நடத்தலும், அழியாத பழியே.



  1. பகை,பாவம், அச்சம், பழி,என நான்கும்,
     இகவாஆம், இல்இறப்பான் கண்.  

     மனைவியிடம் எல்லை கடத்தலும்,
       பகை,பாவம், அச்சம், பழியே.

  1. அறன்இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன்இயலாள்
     பெண்மை நயவாத வன்.

       பிறனது மனைவியை விரும்பாதான்,
       அறநெறி வாழ்க்கையான் ஆவான்.

  1. பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை, சான்றோர்க்(கு)
     அணிஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.

       பிறன்இல்லாளை விரும்பாத ஆளுமை,
       பெரியார்க்[கு] அழகும், ஒழுக்கமும்.

  1. ‘நலக்(கு)உரியார் யார்?’எனின், நாமநீர் வைப்பின்,
     பிறற்(கு)உரியாள் தோள்,தோயா தார்.

       பிறனுக்கு உரியாளைத் தழுவார்,
       உலக நலத்திற்கு உரியார்.

  1. அறன்வரையான், அல்ல செயினும், பிறன்வரையாள்
     பெண்மை நயவாமை நன்று.

       அறன்மறந்து, தீமை செய்தாலும்,
       பிறனது மனைவியை விரும்பாதே.
 – பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 016. பொறை உடைமை)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்