திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை
01அறத்துப் பால்
02.இல்லற இயல்
அதிகாரம் 018. வெஃகாமை
எந்தக் காரணத்தாலும் பிறரது
பொருள்களைப் பறிக்க விரும்பாமை.
- நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,
பிறரது பொருளைப் பறிக்க
விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும்.
- படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,
வருபயன் விரும்பிப், பழிப்புச்
செயல்களை நடுநிலையார் செய்யார்.
- சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,
பேரின்பம் விரும்புவார், அறன்மறந்து
சிற்றின்பச் செயல்களைச் செய்யார்.
- “இலம்”என்று, வெஃகுதல் செய்யார், புலம்வென்ற
ஐந்து புலன்களையும் வென்றார்,
ஏழ்மையிலும் பிறர்பொருளை விரும்பார்.
- அஃகி அகன்ற அறி(வு),என்ஆம்? யார்மாட்டும்,
கூர்அறிவார், பிறரது பொருள்களை
விரும்பும் வெறிச்செயல் செய்யார்.
- அருள்வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள்வெஃகிப்,
பிறரது பொருள்களைப் பறிக்க
விரும்பும் அருளாளனும், கெடுவான்.
- வேண்டற்க, வெஃகிஆம் ஆக்கம், விளைவயின்,
பின்விளை பயன்கள் இழிவாதலின்
பிறர்தம் பொருள்களை விரும்பாதே.
- அஃகாமை, செல்வத்திற்(கு) யாது?எனின், வெஃகாமை
குறையாத செல்வத்தை விரும்பின்,
பிறரது செல்வத்தை விரும்பாதே.
- அறன்அறிந்து, வெஃகா அறி(வு)உடையார்ச் சேரும்,
பிறரது பொருள்களை விரும்பா
அறத்தாரிடமே செல்வமும் சேரும்.
- இறல்ஈனும், எண்ணாது வெஃகின்; விறல்ஈனும்,
பிறரது பொருள்மேல் விருப்பம்,
அழிவு; விரும்பாமை, பெருவெற்றி.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 019. புறம் கூறாமை)
Comments
Post a Comment