திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 014. ஒழுக்கம் உடைமை
01.அறத்துப் பால்.
02.இல்லற இயல்
அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை
நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும்,
செய்யும் வாழ்வியல் உயிர்நெறி
- ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம்,
சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை,
உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க.
- பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித்
எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே,
காக்க வேண்டிய ஆக்கத்துணை.
- ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம்,
ஒழுக்கம் உண்மை, உயர்குடிப்பிறப்பு;
ஒழுக்கம் இன்மை, இழிபிறப்பு.
- மறப்பினும், ஓத்துக் கொளல்ஆகும்; பார்ப்பான்,
மறந்ததை நினவுகொள்ளலாம்; ஒழுக்கம்
மறந்தால், பார்ப்பானும் கெடுவான்.
- அழுக்கா(று) உடையான்கண், ஆக்கம்போன்(று) இல்லை,
பொறாமையர்க்கு வளர்ச்சியும் இல்லை;
ஒழுக்க[ம்இ]லார்க்[கு] உயர்வும், இல்லை.
- ஒழுக்கத்தின் ஒல்கார், உரவோர், இழுக்கத்தின்,
“ஒழுக்கம் தவறின், துயரமே”என,
அறிந்தார், ஒழுக்கம் தவறார்.
- ஒழுக்கத்தின் எய்துவர், மேன்மை; இழுக்கத்தின்
ஒழுக்கத்தால் மேம்பாடும், ஒழுக்கக்கேட்டால்
வாராப் பழியும் வரும்.
- நன்றிக்கு வித்(து)ஆகும், நல்ஒழுக்கம்; தீஒழுக்கம்,
நல்ஒழுக்கம் இன்பத்திற்கு விதைஆம்;
தீஒழுக்கம் துன்பத்திற்கு, விதைஆம்.
- ஒழுக்கம் உடையார்க்(கு) ஒல்லாவே, தீய,
வாய்தவறியும், தீய சொற்களைக்,
கூறல் ஒழுக்கத்தார்க்குப் பொருந்தாது.
- உலகத்தோ(டு) ஒட்ட ஒழுகல், பலகற்றும்
உயர்ந்தாரோடு பொருந்த நடவாதார்,
பலநூல்கள் கற்றும், கல்லாதார்.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Comments
Post a Comment