Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்


arusolcurai_attai+arangarasan

01. அறத்துப் பால்              

02. துறவற இயல்                

அதிகாரம் 026. புலால் மறுத்தல்


அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க்
கொலையை எண்ணாமையும் அருள்.

  1. தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான்,
     எங்ஙனம் ஆளும் அருள்….?

உடலைப் பெருக்க, உடலுண்பான்
       எங்ஙனம் அருளை ஆள்வான்….?

  1. பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி,  
     ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு.

காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத்
       தின்பார்க்கு, அருளும் இல்லை.

  1. படைகொண்டார் நெஞ்சம்போல், நன்(று)ஊக்கா(து), ஒன்றன்
   உடல்சுவை கண்டார் மனம்.

       கொலைக்கருவி எடுப்பாரும், இறைச்சி
       உண்பாரும், அருளை எண்ணார்.

  1. அருள்அல்ல(து) யா(து)….?எனில், கொல்லாமை; கோறல்,
   பொருள்அல்ல(து) அவ்ஊன் தினல்.

  கொல்லாமையே அருள்ஆகும்; கொல்லல்,
       அப்புலால் தின்னல், அறம்ஆகா.

  1. உண்ணாமை உள்ள(து), உயிர்நிலை; ஊன்உண்ண,
    அண்ணாத்தல் செய்யா(து), அளறு.

  புலால்மறுப்பால் உயிர்கள் இருக்கும்;
       உண்பாரை நரகமும் ஏற்காது.


  1. தினல்பொருட்டால், கொள்ளா(து) உல(கு)எனின், யாரும்
   விலைப்பொருட்டால், ஊன்தருவார் இல்.

  இறைச்சியை வாங்குவார் இல்லை
       என்றால், விற்பாரும் இல்லை.

  1. உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறி(து)ஒன்றன்
     புண்அது, உணவார்ப் பெறின்.

பிறிதோர் உயிரின் புண்ஆகிய
       புலாலை உண்ண வேண்டாம்.

  1. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்,
     உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

       மற்றவர் கொன்ற உடல்ஆயினும்
       குற்றம்அற்ற அறிஞர் உண்ணார்.
  1. அவிசொரிந்(து), ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
   உயிர்செகுத்(து) உண்ணாமை நன்று.

  ஆயிரம் வேள்விகள் செய்வதைவிடக்,
       கொல்லாமை, தின்னாமை நல்லது.

  1. கொல்லான், புலாலை மறுத்தானைக், கைகூப்பி,
   எல்லா உயிரும் தொழும்.

  எவ்உயிரையும் கொல்லானை, உண்ணானை,
       உயிர்கள் கைகூப்பி வணங்கும்.
  • பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்