Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை


(அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

01.அறத்துப் பால்

03.துறவற இயல்  

அதிகாரம் 032. இன்னா செய்யாமை


என்றும் எதற்காகவும் எங்கும்
எவர்க்கும் எத்துயரும் செய்யாமை.

  1. சிறப்(பு)ஈனும், செல்வம் பெறினும், பிறர்க்(கு)இன்னா
     செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.

       சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக,  
       எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே.

  1. கறுத்(து),இன்னா செய்தவக் கண்ணும், மறுத்(து),இன்னா
     செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.

        துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத்
       தராமையே தூயார்தம் கொள்கை.

  1. செய்யாமல், செற்றார்க்கும், இன்னாத செய்தபின்,
   உய்யா விழுமம் தரும்.

       பகைக்காத போதும் பகைத்தாரைத்
       துன்புறுத்தின் துன்பம்தான் வரும்.

  1. இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்நாண,
 நல்நயம் செய்து விடல்.

       கொடுமை செய்தார்க்கும் தண்டனை,
       அவர்வெட்கும்படி நன்மை செய்தலே.

  1. அறிவினான், ஆகுவ(து) உண்டோ? பிறிதின்நோய்,
   தன்நோய்போல் போற்றாக் கடை.

       பிறரது துயரைத் தம்துயர்போல்,
       கருதாரின் அறிவால் பயன்உண்டோ?    

  1. இன்னா எனத்,தான் உணர்ந்தவை, துன்னாமை
    வேண்டும், பிறர்கண் செயல்.

        தனக்குத் தீங்குகள் எனத்தான்
       உணர்ந்தவற்றைப், பிறருக்கும் செய்யாதே.

  1. எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம்,
     மாணாசெய் யாமை தலை.

       எச்சிற்றளவும், என்றும், யார்க்கும்,
       மனத்தாலும், வெறுப்பன நினைக்காதே.

0318. தன்உயிர்க்(கு) இன்னாமை தான்அறிவான், என்கொலோ?
   மன்உயிர்க்(கு) இன்னா செயல்.  

      தன்உயிர்க்கு ஆகாது எனத்தான்
       உணர்வதை, எவ்உயிர்க்கும் செய்யற்க.

  1. பிறர்க்(கு)இன்னா முற்பகல் செய்யின், தமக்(கு)இன்னா,
     பிற்பகல் தாமே வரும்.
                 முற்பகலில் செய்தீமை, பலவாகிப்
                   பிற்பகலில் தாமாவே வரும்.

  1. நோய்எல்லாம், நோய்செய்தார் மேலஆம்; நோய்செய்யார்,
   நோய்இன்மை வேண்டு பவர்.

                   துயரங்கள் துயர்தந்தார் மேல்ஆம்;
       துயர்விரும்பார், துயரைச் செய்யார்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்