திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 016. பொறை உடைமை
01.அறத்துப் பால்
02.இல்லற இயல்
அதிகாரம் 016. பொறை உடைமை
பிறரது பிழைகளை — குற்றங்களைப்
பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல்.
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை
தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும்
நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க.
- பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை
வரம்பு கடந்த குற்றங்களையும்
பொறுத்தலினும், மறத்தலே நன்று.
- இன்மையுள் இன்மை, விருந்(து)ஒரால்; வன்மையுள்
வறுமை, விருந்தினரை விலக்கல்;
வலிமை, அறியாரைப் பொறுத்தல்.
- நிறைஉடைமை நீங்காமை வேண்டின், பொறைஉடைமை
நிறைவான மனத்தை விரும்பினால்,
பொறுமைக் கடைப்பிடி வேண்டும்.
- ஒறுத்தாரை, ஒன்றாக வையாரே; வைப்பர்,
தண்டிப்பார் மதிக்கப்படார்; பொறுப்பார்
பொன்னைப் போல மதிக்கப்படுவார்.
156. ஒறுத்தார்க்(கு), ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப்,
பொன்றும் துணையும் புகழ்.
தண்டிப்பார்க்கு ஒருநாள் இன்பம்;
பொறுப்பார்க்குச் சாம்அளவும் இன்பம்.
- திறன்அல்ல, தன்பிறர் செய்யினும், நோநொந்(து),
முறைஅல்ல செய்தார்க்கும், வருந்தி
அறம்அல்ல செய்யாமை நல்லது.
- மிகுதியான் மிக்கவை செய்தாரைத், தாம்தம்,
மிகுபிழைகள் செய்தாரையும், பொறுமைத்
தகுதியால் வெல்ல வேண்டும்.
- துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார்வாய்
தீய சொற்களைப் பொறுப்பவர்,
தூய துறவியரைவிடத் தூயவர்.
- உண்ணாது நோற்பார் பெரியர், பிறர்சொல்லும்
கடுந்தவப் பெரியாரும், கடும்சொல்
பொறுப்பார் பின்னர் நிற்பவரே.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 017. அழுக்காறாமை) அகரமுதல91 ஆடி 24, 2046 / ஆக.09, 2015
Comments
Post a Comment