Posts

Showing posts from August, 2015

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      30 August 2015       No Comment (அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்   அதிகாரம் 032. இன்னா செய்யாமை என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை . சிறப் ( பு ) ஈனும் , செல்வம் பெறினும் , பிறர்க் ( கு ) இன்னா      செய்யாமை , மா ( சு ) அற்றார் கோள் .        சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக ,          எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே . கறுத் ( து ), இன்னா செய்தவக் கண்ணும் , மறுத் ( து ), இன்னா      செய்யாமை , மா ( சு ) அற்றார் கோள் .          துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத்        தராமையே தூயார்தம் கொள்கை . செய்யாமல் , செற்றார்க்கும் , இன்னாத செய்தபின் ,    உய்யா விழுமம் தரும் . ...

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 031. வெகுளாமை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      30 August 2015       No Comment (அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  03. துறவற இயல்   அதிகாரம் 031. வெகுளாமை எப்போதும் , எவரிடத்தும் , எதற்காகவும் , சினமோ , சீற்றமோ கொள்ளாமை .   செல்இடத்துக் காப்பான் , சினம்காப்பான் ; அல்இடத்துக்      காக்கின்என் ? காவாக்கால் என் ?     செல்இடத்தில் சினம்அடக்கு ; செல்லா        இடத்தில் அடக்கு ; அடக்காமல்போ . செல்லா இடத்தும் சினம்தீ ( து ); செல்இடத்தும்      இல் , அதனின் தீய பிற .   செல்இடத்தும் , செல்லா இடத்தும் ,        சினத்தலைவிடத் , தீயது வே [ று ] இல்லை . மறத்தல் வெகுளியை , யார்மாட்டும் ; தீய      பிறத்தல் , அதனான் வரும் .   தீமைகளின் பிறப்பிடமாம் சினத்தை        யாரிடத்தும் மறத்...

இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      30 August 2015       No Comment (ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.   தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும் ஔவும் ஒலிக்கும் முறையைக் கூறுவதற்கு வேற்றுமொழிநூலின் துணையை நாடவேண்டியது எற்றுக்கு’ (மே.ப. ப.153) என வினவுகிறார் பேராசிரியர்.   இங்கேயும் ‘பிராகிருத பிரகாசா’ நூலிலிருந்துதான் தொல்காப்பியம் பெற்றுள்ளது என வையாபுரியார் கருதுகிறாரே தவிர, தொல்காப்பி- யத்திலிருந்து பிராகிருத பிரகாசா ப...