Posts

Showing posts from March, 2017

தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்

Image
அகரமுதல 179, பங்குனி 13 , 2048 /   மார்ச்சு 26 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      26 மார்ச்சு 2017       கருத்திற்காக.. தமிழ்த்தாய் வணக்கம் 1-5 நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப் பலகாலந் தொட்டுப் பருவங் குலையா திலகுதமிழ்த் தாயே இனிது என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர் இதழ்வாழும் தாயே இனிது உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க ஆதித் தமிழே அழியாத தத்துவமே சோதிப் பொருளே துதி. காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ் சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத் தெய்வ அருளும் திருவும் இலங்குமணிப் பைந்தமிழே வாழ்த்துமென் பாட்டு பொங்கல் படைத்துப் புதுமகிழ்ச்சி வெள்ளத்தில் எங்கும் தமிழர் இனிதிருக்கத்-தங்கத்தாய்ச் செந்தமிழே கன்னித் திருவேஉன் சீர்பரப்பிச் சிந்தை மகிழ்வோம் சிரித்து! -பாவலர் நாரா. நாச்சியப்பன்

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்

Image
அகரமுதல 179, பங்குனி 13 , 2048 /   மார்ச்சு 26 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      26 மார்ச்சு 2017       கருத்திற்காக.. தாத்தா – சந்தர் சுப்பிரமணியன் தாத்தா எங்கோ நடக்கும் போதும் சத்தம் கேட்கிறது! ‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத் தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை பக்கம் கேட்கிறது! எனக்குப் பக்கம் கேட்கிறது! சட்டைப் பையில் ‘ சாக்லெட் டு ’ எடுத்துத் தாத்தா தந்திடுவார்! எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான் சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம் தாத்தா வந்திடுவார்! என்முன் தாத்தா வந்திடுவார்! வீட்டில் இருக்கும் வேளை கணக்கில் விளக்கங்கள் சொல்வார்! வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என் வெள்ளைத் தாளில் வண்ணம் தீட்டி வேடிக்கை செய்வார்! நன்றாய் வேடிக்கை செய்வார்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்:  பக்கம் 30

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24

Image
அகரமுதல 179, பங்குனி 13 , 2048 /   மார்ச்சு 26 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      26 மார்ச்சு 2017       கருத்திற்காக.. (கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22 தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24 இருபத்து மூன்றாம் பாசுரம்  தமிழரின் பெருமை எங்கே? கரைநாடாம் மூன்று கடல்சூழ் தமிழ்மண் திரைமேவி நாவாய் செல,உயர்ந்த பண்டம் சரியாய்க் கொளக்கொடுத்தும் செய்தார் அறமாய் இறைச்சுங்கம் வாங்கிஉரு முத்திரையும் வைத்தார் ! கரையெங்கும் வாங்கிவிற்கும் குன்றாப் பொருட்கள் ! பெருமைகொளும் நெஞ்சம்;புகழ்பாடும் நம்வாய் அருமையெலாம் எங்குற்று? அருந்தமிழர் ஓங்கிப் பொருப்பில் தமிழ்க்கொடி ஏற்றவைப்போம், எம்பாவாய் ! இருபத்து நான்காம் பாசுரம்  அயல்நாட்டறிஞர்களை அழைத்தோம்புக! எங்கோ பிறந்தவர்கள் இம்மண்ணில் வாழவந்தே சங்கம் வளர்த்ததமிழ் தாம்பயின்று மேலுயர்ந்தார் மங்கா முயற்சியினால் முத்தமிழில் நூல்படைத்தே தங்கள் மொழியுள்ளும் நம்செல்வம் கொண்ட...