பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்
பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்
தனக்குத் தானே கட்டிக்கொள்!
பறவையே பெருந் தச்சன்!
பாரினில் முதல் சிற்பி!
பாரினில் முதல் சிற்பி!
திறமையாக கட்டும் கலைஞர் !
தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்!
தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்!
சிறகுதான் பறக்கும் விமானம்!
சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்!
சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்!
உறவுக்கு சொந்த இல்லம்!
உலகுக்கே வீட்டுப் பாடம்!
உலகுக்கே வீட்டுப் பாடம்!
கட்டுமான வீட்டின் அடித்தளம்
எட்டடி தோண்டினாலும் விழுதே!
எட்டடி தோண்டினாலும் விழுதே!
கற்றுக்கொள் பறவை பாடம் !
கல்வியதுவே தொழில் நுட்பம்!
கல்வியதுவே தொழில் நுட்பம்!
விட்டுவிட்டு வீசும் தென்றல்
ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் !
ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் !
ஒட்டிகிளையில் விழாத கூடு!.
முட்டைவிழா அற்புத வீடு !
முட்டைவிழா அற்புத வீடு !
தொங்கும் தோட்டக் குடிலில்
தங்கிவசிக்க ஆசைக் கிளியே !
தங்கிவசிக்க ஆசைக் கிளியே !
இங்கே அந்தரத்தில் இல்லம்
இனிதே கட்ட என்னவிலையே!
இனிதே கட்ட என்னவிலையே!
உன்னை மனிதன் கேட்கிறான்!
“தனக்குத் தானே கட்டிக்கொள்!
“தனக்குத் தானே கட்டிக்கொள்!
என்னைப் பார்த்து கற்றுக்கொள் ”
விண்ணில் பறந்து சொன்னதுபறவை!
விண்ணில் பறந்து சொன்னதுபறவை!
மாம்பலம் ஆ.சந்திரசேகர்
அருமையான வரிகள்
ReplyDelete