பாடம் கற்கும் முறை – பவணந்தி முனிவர், நன்னூல்





தலைப்பு-பாடம்கற்கும் முறை,பவணந்தி :thalaippu_paadamkarkummurai

பாடம் கற்கும் முறை


நூல் பயில் இயல்பே நுவலின், வழக்கு அறிதல்
பாடம் போற்றல்; கேட்டவை நினைத்தல்,
ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்,
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்,
வினாதல், வினாயவை விடுத்தல், என்றுஇவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்
நன்னூல் 41
  நூல் பயில் இயல்பு நுவலின் – நூலைக் கற்றலின் இயல்பைச் சொல்லின், வழக்கு அறிதல் – உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை நடையையும் ஆராய்ந்து அறிதலும், பாடம் போற்றல் – மூலபாடங்களை மறவாது பாதுகாத்தலும், கேட்டவை நினைத்தல் – தான் கேட்ட பொருள்களைப் பலகால் சிந்தித்தலும், ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் – ஆசிரியனையடுத்து அவற்றைத் தன் மனத்துள் அமையும்படி மீட்டும் கேட்டலும், அம்மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்- அக் கற்கும் தொழிலையுடையவரோடு பழகுதலும் , வினாதல் – தான் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும், வினாயவை விடுத்தல் – அவர் வினாவியவற்றிற்குத் தான் உத்தரம்கொடுத்தலும், என்று இவை கடனாக் கொளின் – என்று சொல்லப்பட்ட இச் செயல்களை முறையாக மாணாக்கன் கொண்டால், மடம் நனி இகக்கும் – அறியாமையானது அவனை மிகுதியும் விட்டு நீங்கும்.
பவணந்தி முனிவர், நன்னூல்
காண்டிகையுரை
அட்டை-நன்னூல், காண்டிகையுரை: attai_nannuul_kaandikaiyrai_aarumuganaavalar

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்