தலைப்பு-வ.உ.சி.யின்மெய்யறம்-விதியியல் அறிதல் : thalaippu_va.u.chi._meyyaram_2.vidhiyiyalarithal

 

மெய்யறம் (மாணவரியல்)

[வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]

 2. விதியியல் அறிதல்
11. வினையின் விளைவே விதியென வந்துறும்.
நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும்.
  1. விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே.
ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும்.
  1. மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும்.
இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம்.
  1. தீவினை விளைவிற் சேருவ துன்பம்.
தீவினைகளால் துன்பமே வந்து சேரும்.
  1. நல்வினை விளைவி னணுகுவ வின்பம்.
நல்ல செயல்களினால் இன்பமே வந்து சேரும்.
  1. தீவிதி வரவைச் செப்பு மடன்மடி.
நாம் அறிவின்மையும் சோம்பலும் உடையவர்களாக இருந்தால் தீயவிதியை அடைவோம்.
  1. நல்விதி வரவை நவிலுமறி வூக்கம்.
நாம் அறிவும் ஊக்கமும் உடையவர்களாக இருந்தால் நல்ல விதியை அடைவோம்.
  1. விதியை மாற்றிட வினையை மாற்றுக.
விதியை மாற்ற வேண்டும் எனில் செயல்களை மாற்றவேண்டும்.
  1. தீவிதி வேண்டிற் றீவினை புரிக.
தீயவிதி வேண்டும் எனில் தீய செயல்களைச் செய்ய வேண்டும்.
  1.  நல்விதி வேண்டி னல்வினை புரிக.
நல்லவிதி வேண்டும் எனில் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
அட்டை-மெய்யறம்01 : attai_meyyaram 01