தலைப்பு-தோன்றுவான் தேர்தல்களத்தில் வீணே!-தமிழ் சிவா : thalaippu_thonaduruvaan_therthalkalathil

தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே!


சிறிய வீட்டின் சிதைந்த தூண்பற்றி
உன்மகன் எங்கே என்று கேட்பவனே!
என்மகன் எங்கிருப் பானென்று அறிவேன்.
நீங்கள் நீக்கமறத் திறந்து வைத்த
சாய்க்கடை மதுவின் முன்பே வீழ்ந்து
வாய்க்கடை எச்சில் வடியக் கிடப்பான்.
வௌவால் தங்கிய குகையாய், அய்யோ
ஈன்ற வயிறோ இதுவே, அடேய்!
மீண்டும் மீண்டும் வேண்டி யழைத்துக்
கும்பிடு போட்டுத் தூக்கி வந்து
கையில் புட்டியும் கறிச்சோறும் தந்தால்
தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே!
  • திணை – வாகை, துறை – ஆள்பிடித்தல் / கையூட்டுக் கொடுத்துக் கால்பிடித்தல்

  • நன்றி – காவற்பெண்டு (புறநானூறு, 86)

 தமிழ் சிவா
சிவா தமிழ்01 - siva, gandhigram