Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5.தீயினம் விலக்கல்




தலைப்பு-வ.உ.சி.யின் மெய்யறம் : thalaippu_va.u.ci_meyyaram-5theevinaivilakkal

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம்
மெய்யறம் (மாணவரியல்)
[வ. உ. சிதம்பரம்(பிள்ளை)

கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]

5.தீயினம் விலக்கல்

  1. தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே.
தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும்.
  1. தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர்.
தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள்.
43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள்.
பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள்.
  1. துணைவரல் லாரை யணையுமா வினத்தர்.
தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர்.
  1. அறிவினை மயக்குவ வருந்து மூடர்.
அறிவினை மயக்கக்கூடிய பொருட்களை உட்கொள்ளும் மூடர்கள்.
  1. புரைவளர் பொய்ம்மை புகலுந் தீயர்.
குற்றத்தை வளர்க்கும் இயல்புடையதாகிய பொய்யினைப் பேசும் தீயவர்கள்.
  1. அறனோ பொருளோ வழிக்குங் கயவர்.
அறத்தையும் பொருளையும் அழிக்கும் கீழ்மக்கள்.
  1. பசுவின் செயலைப் பதியின தென்பர்.
மனிதரின் செயல்களுக்கு இறைவனே காரணம் என்பவர்கள்.
  1. இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
  1. தீயின மெல்லா நோயென விலக்குக.
தீயவர்களை நோயைப் போல் விலக்க வேண்டும்.

வ.உ.சிதம்பரனார்
அட்டை-மெய்யறம்01 : attai_meyyaram 01

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்