கூடா நட்பு -தமிழ் சிவா
கூடா நட்பு
ஆங்கிலப் புத்தாண்டை அமைவுறக் கொண்டாட
அடுத்த நாட்டுக்குப் போகும் அ“று”ந்தகையே!
அரிசனர் வீட்டிலே அரிசிச் சோறுண்டால்
ஆகுமோ அனைவரும் இணைதான் என்றே?
முட்டிலாக் காவலில் கட்டினில் உறங்கிய
சுரங்கக் கோப்புகள் பிள்ளைக் கரிக்குச்சியோ?
வெட்டிய வெளிச்சமும் திட்டிய வாய்களும்
எட்டியாய் இருந்த இணக்கமும் இன்று
வெற்றிலைக் காம்பாய் ஒட்டி இருப்பது
வெட்டி எறிய அல்லால் வேறெதற்கு?
Comments
Post a Comment