Skip to main content

தெளிந்தவர் வாக்கு - தமிழ் சிவா




தலைப்பு-தெளிந்தவர்வாக்கு, தமிழ்சிவா : thalaippu_thelinthavar_vaakku_thamizhsiva

தெளிந்தவர் வாக்கு

கொடுக்கப்பட்ட புகார்களை
வரிசையாய் எண்களிட்டு
வாகாய் அடுக்கிவைக்கும்
காட்சிக் கூடமொன்று
கண்டுகளிக்க உள்ளதெனக்
கண்டவர்கள் சொன்னார்கள்!
கயமைத்தனத்தைக் குத்தகையெடுத்துக்
கழிபேருவகை எய்தியோர்
களிநடம் புரிய
அரங்குகள் அமைத்துத்தரும்
ஆணையம் உண்டென்று
அறிந்தவர்கள் சொன்னார்கள்!
சீர்திருத்தம் எனச்சொல்லி
ஓர்திருத்தமும் செய்யாத
நாடறிந்த நல்லோரவை
நம்நாட்டில் உண்டென்று
நன்கறிந்தோர் சொன்னார்கள்!
தப்படியும் சேப்படியும்
ஒப்பில்லாமல் செய்தவர்கள்
எப்படியும் வெற்றிபெற்றுக்
கறைவாழ்வு வாழ்ந்திடவே
கலங்கரை விளக்கமாய்க்
கலங்காது பணியாற்றும்
மெத்தபடித்த மேதையோரவை
இத்தமிழ் நாட்டிலும்
உண்டெனும் உண்மையைத்
தெளிந்தவர்கள் சொன்னார்கள்
தேர்தல் ஆணையமென்று!
தமிழ் சிவா

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்