தலைப்பு-முகவரியற்ற மனிதன் : thalaippu_mukavariatramandai

முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்!

முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்
அச்சடித்த வாக்குச் சீட்டில் அழ கழகாய்
அவனின் பெயர்..
வறுமைக் கோட்டின் வரிகளைப்
படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது
கடந்த தேர்தலில் கிடைத்த புத்தாடை
அவன் மேனியைக் கந்தல் கந்தலாய்..
அரசுடமைக் களவாணிகள் கட்சிக் கொடியுடன்
ஐந்தாண்டுக் கொருமுறை வேட்டித்  துண்டுடன்
குசேலரின் வாக்குச் சீட்டில்
கறுப்புப் பண குபேரர்கள் நாற்காலியில்..
அங்கம் எங்கும் தங்க நகை
அது உறங்க பணக்கத்தை மெத்தை
வீதி வாசி ஓலைப் பாயும் இன்றி இருட்டில் .. ..
கவிஞர் வல்வை சுயேன்

கவிஞர் சுரேந்திரன், வல்வை : surenthiran_valvai