Skip to main content

எங்கள் பெரியார் – கவிமதி

periyaar+

எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார்

மூடிமறைத்துப் பேச
அறியார்
மூடப் பழக்கம் எதுவும்
தெரியார்
நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வருணம் கலைத்த
கரியார்
எளிதாய்க் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
தெளியார் அறிவு நெய்த
தறியார்
தெளிந்தோருக்குத் தெளிவான
குறியார்
உலகத் தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மனு வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்குத் தெளிவான
ஒலியார்
தேடிப் படிக்க சிறந்த
நெறியார் – தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.

கவிமதி

கவிமதி02  : kavimathy02
முத்திரை-தமிழ்க்கூடல் : muthirai_thamizhkuudal


அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்