எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார்
- புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக்
தோழ னின்றிச் சோகமுற் றிடுவள்
வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய
மரங்களின் மீது, மார்புறத் தழுவிய
- தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த
இவ்வகை நிலையை யெய்திய அரசியும்
குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய
* கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள்
- கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று
எடுத்தனள்; தைத்து இவளே அன்பின்
தோழனுக் களித்த தொன்றெனக் கண்டனள்
ஊற்றுப் பெருக்கென விழியுமுகுந்திட
- ஒன்றும் தோன்றிலள் நின்றனள் இருளில்
ஆடினள் ஓடினள் அடியில் மரம்போல்
சாய்ந்தனள்; தோழியும் தன்முன் றானையால்
- தெளிந்தபின் அருகே சிதைந்து கிடந்த
குருதித் துணியால் கொண்ட துயரைக்
கூட்டின் தோற்றம் நாட்டி வளர்த்தது
“காதலன் பட்டான் கையிற் கிட்டான்
- இன்ப வுலகம் எட்டிச் சென்றதே
மன்னா வுலகில் மன்னிப் பயனென்
உயிரஃதகன்றபின் உடலாற் பயனென்?
இருப்பது மேலோ இறப்பது மேலோ?
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12)
Comments
Post a Comment