தலைப்பு-சொல் : thalaippu_sol

கூரிய வாளைவிட
கூரிய  சொல் வலிமை!
கூடுமட்டும்  சொல் காக்க
கூடுமுந்தன் வாழ்வில் நலம் !
வாளினாலிவ் உடலில் துன்பம்
சொல்லினாலிவ் வாழ்வே துன்பம் !
வரம்புடைய  சொல்லால்
வாழ்வினிலே சேரும் இன்பம் !
ஒரு  சொல் உரைத்திடினும்
உயர்வு எனின் உலகை ஆளும் !
தவறான  சொல்  லெனின்
தரமிழந்து தரணி மாளும் !
ஆதலினால்  சொல்லினை
அளந்து நீங்கள் பேசிடுவீர் !
காதலினால் பேசுதற்போல்
கண்ட  சொல் விட்டிடாதீர் !
மதன். சு  
சேலம்