Skip to main content

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 9 – பேரா.சி.இலக்குவனார்

attai_ezhilarasi

9

ஆயினும் அவளும் அடிக்கடி வைகலும்
வினவத் தொடங்கினள் வீணே வருந்திக்
காரணம் பலசொலிக் கழித்தன ராயினும்
மூத்தோ னொருவன் முனிந்தன னோக்கி 8
  1. “ஆடலனென்ற ஆடவனைத் தினமும்
வந்து வினவக் காரணம் யாதோ?
என்ன முறையினன்; என்றும் வினவுவாய்
வினவின் இனிநீ விரும்பா ஒர்விடை
விரும்பி யளிப்போ மென்ற விடைத்தனன்”
  1. அன்பனைக் காணா அவ்வெழி லரசி
அடுத்துச் சொல்லின் கெடுக்கவுந் துணிவரென்
றஞ்சிக் கூறினள் மிஞ்சிய வார்த்தை
உள்ளில் மிளிரும் உயர்பெருந் தலைவன்
கண்முன் தோன்றவும், காதலில் நீந்தவும்
  1. பேரவாக் கொண்டனள்; பெரிதும் வருந்தினந்
அல்லும் பகலு மவனின் மையினால்
சோலை புக்குச் சோர்ந்து புலம்பி
நிலையாய் நிற்கும் மாந்தரு வேயோ
நீபோய்க் கடிதிற் கூறா யேயோ
  1. அலையும் நெஞ்சை அமையும் இலைகாள்
அருளென் தன்மை யறியீ ரேயோ
இணைந்து நிற்பீர் என்றும் குருகீர்
என்னிலை கண்டு நொடியும் உருகீர்
குலவும் கிளிகாள் கூவும் குயில்கள்
  1. கூடிக் சென்று கூடச் சொல்வீர்
எனப்பல புகன்று; ஏங்கினள் மிகவும்;
மகிழ்ந்து குலவும் மகளீர் முன்வரின்
உள்ளங் குளிர்ந்து ஒருநொடி யும்மவர்
இத்தகைத் துன்பம் எய்த அஞ்சுவள்
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்




Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue