புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்
இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி
“கலைஞருள் வள்ளல், காசினி போற்றும்
வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும்
ஒல்லும் வகையில் உடனே உதவும்
புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும்
நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம்
இனிதே வாழ என்றும் எண்ணி
அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர்
இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும்
அண்ணா வழியில் அணியுறச் செல்லல்
முந்துறும் தளபதி, மூவா இளைஞர்
இராமச்சந்திரன் எனும் பெயரால்
எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன்
ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற
நடிக்கும் வித்தகர், நடிப்போர் சூழமும்
ஐம்பெருங் குற்றமும் அணுகா விறலினர்;
இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி
வாழ்க பல்லாண்டு வாழ்க
சூழ்க நல்லிசை, தூய் தமிழ் வெல்கவே!
-பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(மேனாள்அமைச்சர்
நாவுக்கரசு காளிமுத்து, இலக்குவனார் படைப்புகள் குறித்து முனைவர் பட்ட
ஆய்வு மேற்கொண்டிருந்த கா.மாரிமுத்துவிடம் மனப்பாடமாகத் தெரிவித்த கவிதை.
எப்பொழுது பாடப்பெற்றது? எதில் இடம் பெற்றது என்ற விவரம் தெரியவில்லை.)
Comments
Post a Comment