Skip to main content

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12)
attai_ezhilarasi


“இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல்
  1. இயலா தெனினும் இனியது மதுவே
பாற்சுவை யறியார் பாலுக் காக
வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின்
காதலை யறியாய்! காதற் பொருட்டு
நோதலு மின்று; ஓதிய காதற்
  1. சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை
இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்?”
எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு
“காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே
நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே
  1. மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட
மன்னாக் காதல் மன்னிய கருவியாம்
மக்களை யழித்திட வலிபெற் றுளதோ?
அதற்கே யடிமையாய் ஆடத் தொடங்கின்
அழிக்கும் வலியை யளித்தவ ராவோம்
  1. பல்வளம் கெழுமி, நற்கவின் பெற்றுள
ஒருவனும் ஒருத்தியும், ஒருமுறை நோக்கினும்
மின்னென் றுணர்வு மேவிப் பாய்ந்திடல்
யாரும் உணர்ந்ததே சாரச் சார
உடல்வள னாலோ அன்றி அறிவின்
  1. சீர்த்தியைக் கண்டோ செல்வப் பெருக்கின்
தோற்றம் பெற்றோ தோன்றும் குணங்களில்
ஆர்வங் கொண்டோ அவ்வுணர்வு வலியுற்று
காதல் காதல் கைவரப் பெறாரேல்
சாதல் சாதல் என்றே சாற்றுவர்
430.        இதுவே காதலின் இயல்பெனக் கூறினள்
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்