தொழுமின்! செழுமின்! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்!
விழுமின், உன்னை ஈன்றவர் அடி விழுமின்!தொழுமின், உன்னை மீண்டவர் அடி தொழுமின்!
அழுமின், உனக்காக மாண்டவர் நினைந்து அழுமின்!
விழுமின், விழாமல் பதவிவர மக்கள் அடி விழுமின!
செழுமின், செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்!
குழுமின், கூசாமல் பிறமொழி தவிர்த்துக் குழுமின்!
இழுமின், இனிக்கும் தமிழ்மொழி உனக்கே என இழுமின்!
உழுமின், கழனியில் பணியில் நீர் உழைத்துச் செழுமின்!
Comments
Post a Comment