நடைமுறைப் புத்தாண்டில் உறுதி கொள்வீர்!

தலைப்பு-தமிழ்நாடாளவேண்டும் : thalaippu_thamizhnaadaalavendum

உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன்

முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு
மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை,
அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல
அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி
உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும்
உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும்
புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப்
புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்!
தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார்
தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால்
கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்?
கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்;
புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப்
புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின் மானம்
நலங்கெட்டுப் போவதுவோ? தமிழே இந்த
நாடாள வேண்டுமென உறுதி கொள்வீர்!
-கவிஞர் முடியரசன்
kavignar-mudiyarasan02


Comments

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்