Posts

Showing posts from 2015

நடைமுறைப் புத்தாண்டில் உறுதி கொள்வீர்!

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      27 திசம்பர் 2015       கருத்திற்காக.. உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன் முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும் உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்! தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால் கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்? கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்; புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின் மானம் நலங்கெட்டுப் போவதுவோ? தமிழே இந்த நாடாள வேண்டுமென உறுதி கொள்வீர்! -கவிஞர் முடியரசன் அகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015

தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்

Image
தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார் இலக்குவனார் திருவள்ளுவன்      27 திசம்பர் 2015       கருத்திற்காக.. எண்ணுறும் போது தமிழையே  யெண்ணீர் இசைத்துழி தமிழையே  யிசைப்பீர் பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே பழுதறப் பண்ணியின் புறுவீர் உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும் உயிருளந் துடித்திடும் போதும் பண்ணினு மரிய தமிழையே  கருதிக் காரிய வுறுதி கொண் டெழுவீர் ! கவியோகி சுத்தானந்த பாரதியார் அகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      27 திசம்பர் 2015       கருத்திற்காக.. (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12)  13 “இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல் இயலா தெனினும் இனியது மதுவே பாற்சுவை யறியார் பாலுக் காக வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின் காதலை யறியாய்! காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்?” எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு “காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட மன்னாக் காதல் மன்னிய கருவியாம் மக்களை யழித்திட வலிபெற் றுளதோ? அதற்கே யடிமையாய் ஆடத் தொடங்கின் அழிக்கும் வலியை யளித்தவ ராவோம் பல்வளம் கெழுமி, நற்கவின் பெற்றுள ஒருவனும் ஒருத்தியும், ஒருமுறை நோக்கினும் மின்னென் றுணர்வு மேவிப் பாய்ந்திடல் யாரும் உணர்ந்ததே சாரச் சார உடல்வள னாலோ அன்றி அறிவின் சீர்த்தியைக் கண்டோ செல்வப் பெருக்கின் தோற்றம் பெற்றோ தோன்றும் குணங்களில் ஆர்வங் கொண்...